யாழ். குப்பிழான் தெற்குப் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் இன்று நேற்று பிற்பகல் நடந்துள்ளது.
குறித்த வீட்டின் சொந்தக்காரரின் மகன் உயிரிழந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் குப்பிழான் வடக்கிலுள்ள தமது மகனின் மரண வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அந்த சமயம் இரண்டு கொள்ளையர்கள் வீட்டின் மதிலேறிப் பாய்ந்து அங்கு திருட்டில் ஈடுபட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையர்களை கண்ட அயல்வீட்டுக்காரர் , கத்தியவாறு அவர்களை துரத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் தற்செயலாக அங்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தரொருவரும், ஊர்மக்களும் இணைந்து மிளகாய்த் தோட்டத்திற்குள் சென்று ஒளிந்து கொண்ட குறித்த கொள்ளையனை மடக்கிப் பிடித்த நிலையில் மற்றையவர் தப்பிச்சென்றுள்ளார்.
இதன்போது அங்கு கூடியிருந்த சிலர் குறித்த கொள்ளையன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.