திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாமல் நாட்டை கட்டியெழுப்பவே கோட்டா ஆட்சிக்கு வந்தார்- விமல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 10, 2020

திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாமல் நாட்டை கட்டியெழுப்பவே கோட்டா ஆட்சிக்கு வந்தார்- விமல்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது  திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாமல் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்காகுமென அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

மேலும் திருடர்களை கண்டுபிடிப்பதாக கூறி பொய்யாக நாடகம் நடித்து கொண்டு இருப்பதற்காக கோட்டாபய ஆட்சிக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹன்வெல்ல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டரீதியாக நடவடிக்கைகைளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டவே ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இது அரசியல் பழிவாங்கல் செயற்பாடு அல்ல. மேலும் நீதியை நிலைநாட்டும் நிறுவனங்கள் எந்ததொரு அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதிக்கத்தை மக்களிடத்தில் அதிகரிப்பதற்காக புதிய புதிய கருத்துக்களை கூறி வருகின்றது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நோயானது கொரோனா அல்ல தொடோனா ஆகும். அதாவது மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தேடுவதை மாத்திரமே இவர்கள் அதிகம் செய்கின்றார்கள்.

மேலும் தொடோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர், நான் 5 இலட்சம் ரூபாய்க்கு கதிரை கொள்வனவு செய்தாக குறிப்பிட்டுள்ளார்.

உண்மையாக நான் 1 சதத்துக்கு கூட கதிரை வாங்கவில்லை. இருக்கின்ற கதிரையே பயன்படுத்துகின்றேன்.

இப்படிதான் பொய்யான தகவல்களை தொடனா உறுப்பினர்கள் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.