கிளிநொச்சி முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் தேடுதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த வீட்டினை சோதனை செய்தபோதே வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபரை இராணுவத்தினர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.