வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா – அமைச்சின் முக்கிய அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா – அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்ததையடுத்து, அதிகாரியின் சகாக்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பணியாளருடன் இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் இணைந்து பணியாற்றிய பணியாளர்களையும் இரண்டு வாரங்களிற்கு முன்னர் ஐரோப்பிய நாடொன்றின் தலைநகரில் அவர் பணியாற்றியவேளை அவருடன் இணைந்து பணியாற்றியவர்களையும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சினை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு தனது பணியாளர்கள் மற்றும் அமைச்சிற்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.