ஹோட்டன் பிலேஸ் வனப்பகுதியில் உயிரினங்களை உயிரோடு பிடித்த மூன்று வெளிநாட்டு பிரஜைகள் எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஹோட்டன் பிலேஸ் வனப்பகுதியில் உயிருடன் உயிரினங்களை பிடித்த வெளிநாட்டு பிரஜைகள் மூன்று பேரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரமோதய ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்
இன்று செவ்வாய்கிழமை குறித்த மூன்று வெளிநாட்டு பிரஜைகளையும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளினால் முன்னிலை படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 நாட்களுக்கு ரசியா நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளாக வந்த இந்த மூன்று வெளிநாட்டவர்களும் நுவரெலியா ஹோட்டன் பிலேஸ் பகுதியில் உள்ள வனப்குதியினை சுற்றிபார்க்க சென்ற போதே அங்குள்ள உயிரினங்களை உயிரோடு பிடித்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மூன்று வெள்நாட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டவர்களினால் பிடிக்கப்பட்ட உயிரினங்களையும் நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது