வல்வெட்டித்துறையில் 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசாரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 3, 2020

வல்வெட்டித்துறையில் 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசாரணை!



வல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்துக்கு புறம்பாக தேடுதலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்குட்படுத்தியுள்ளார் என்று அறியமுடிகிறது.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்கா வளாகத்துக்குள் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் உள்பட 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மாலை அங்கு தேடுதலை மேற்கொண்டனர்.
அவர்கள் சந்தேகத்துக்கிடமான நிலப்பகுதியை இரும்புக் கம்பிகளால் குத்தி தேடுதலை மேற்கொண்டிருந்தனர். அதனை அறிந்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
உரிய அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக நிலத்தை அகழ்ந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். பின்னர் எச்சரிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று அறியமுடிகிறது.