மகிந்த தலையை மண்ணுள் புதைத்துள்ளார்:விந்தன் சீற்றம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

மகிந்த தலையை மண்ணுள் புதைத்துள்ளார்:விந்தன் சீற்றம்?

இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டதாகவும் சரணடைந்த எவரையும் தாம் சுட்டுக் கொல்லவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்ணணியின் ஆதரவாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலரை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது குறிப்பிட்டுள்ளர். அத்தோடு இராணுவத்தினரும் ராஜபக்சவினரும் கொலைகாரர்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பொய்யான பரபரப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குற்றஞ் சாட்டியுள்ளாதோடு தம்மை கொலைகாரர் என்று கூற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போரிலும் அதற்கு முன்னரும் பின்னரும் பாதுகாப்புத் தரப்பினராலே பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற விபரங்கள் வெளியாகி உள்ள நிலையில் பிரதமரின் இக்கருத்தானது உலகத் தமிழரையும் சர்வதேச நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வன்னியில் இறுதிப் போரிலே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பாதுகாப்புபடையினரிடம் சரணடையும்படி படையினர் போர் விமானங்கள் மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசியும் தரையிலே ஒலிபெருக்கி மூலமும் தொடர் அறிவித்தல்களை விடுத்தனர். சரணடைவோரின் உயிருக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

இதை நம்பி ஏராளமானோர் படையினரிடம் சரணடைந்தனர்.எனையோர் வவுனியா ஓமந்தை,முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் போன்ற இடங்களில் வைத்து மனைவிமாரும் பெற்றோரும் தங்கள் உறவுகளை படையினரிடம் கையளித்தனர். இவற்றை விட படையினரால் பலர் யுத்தமுனையில் கைதுசெய்யப்பட்டார்கள். வலுகட்டாயமாக இழுத்தும் செல்லப்பட்டார்கள்,பலர் பலவந்தமாக கடத்தப்பட்டார்கள் இப்படி படையினரால் கொண்டு செல்லப்பட்ட இருபதினாயிரம் பேருக்கு மேல் என்ன நடந்ததே எனத் தெரியாமல் இன்று வரை வருடக்கணக்கில் போராடி வரும் பெற்றோரின் அவல நிலைக்கும் கண்ணிருக்கும் யார் பொறுப்பு? 

காணமற்போனோர் தொடர்பாக போதிய சாட்சியங்கள் இல்லையென எல்லாவற்றையும் மூடி மறைக்க பிரதமர் முயற்சிக்கலாம்! 

ஆனால் முன்பு தனது அரசாலும் பின்புநல்லாட்சி அரசாலும் கணாமல்போனோர் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய்ந்து அறிகை சமர்பிக்க நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு,காணாமற்போனோர் அலுவலகம்,மனிதஉரிமைகள் ஆணைக்குழு,பொலிஸ் நிலையங்கள் முன் தோன்றிய பாதிக்கப்பட்டமக்கள் தங்கள் உறவுகளை எங்கே எப்போது எவரிடம் கையளித்தோம் என்றும்,தமதுஉறவுகள் எப்படி எப்பொழுது எங்கே வைத்து வலுகட்டயமாக கடத்தியும், இழுத்தும்,செல்லப்பட்டார்கள் என்றும் யாரால் எங்கெங்கே வைத்து எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் அறிக்கைகள் மூலமும்,கண்கண்ட வாய்மூல சாட்சியங்களாகவும் வழங்கியிருக்கும் நிலையில் பிரதமர் சாட்சிகள் இ;ல்லையென கூறுவது என்பது எற்புடைய கருத்து அல்ல. தொடர்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் எம்மையும் பாதிக்கப்பட்டோரையும் சர்வதேசத்தையும் ஏமாற்றலாம் என கனவு காணமுடியாது.
பாதிக்கப்படோரின் நேரடி சாட்சியங்களை விட,முன்னாள் ஐநா செயலாளர் பான்கீமூன் அவர்களால் நியமிக்கப்பட்டு பெறப்பட்ட தருஸ்மன் குழு அறிக்கை,சனல் 4 காணொலிகள்,படையினரால் வெளிநாட்டு பிரமுகர்களிடம் கொடுக்கப்பட்டஆவணங்கள், வல்லரசு நாடுகாளால் செய்மதிமுலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் என பல ஆவணங்கள் ஆதார பூர்வமாக உலகநாடுகளிடமும் ஐக்கியநாடுகள் சபை,ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவை போன்றவற்றில் ஆதாரபூர்வமானஆவணங்களாக சிக்கி இருக்கும்; நிலையில் இங்கு யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை,மனிதஉரிமைகள் மீறப்பட்டவில்லை என மீண்டும் மிண்டும்பொய் கூறி எம்மையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் சர்பாக மீண்டும் ஒர் விசாரணை நடாத்த உயர் நீதிமன்ற நீதிபதியை தலைவராகக் கொண்டு உள்ளக விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரிப்பது என்பது காலத்தைக் கடத்தும் கண் துடைப்பு நாடகமாகும். திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட படையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் கொலையோடு தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் .

இவைதான் இலங்கை விசாரணையின் இலட்ச்சணமாகும்.எனவே இந்த அரசு விரைவில் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கமான ஓர் முடிவினை விரைந்து எடுக்கவில்லை எனில் சர்வேந்திர சில்வாவிற்கு விழுந்த பிரயணாத்தடைபோல் இந் நாட்டில் உள்ள பலருக்கு சர்வதேச நாடுகளால் பிரயணத்தடைகள் மேலும் விழக்கூடும் .

அத்தோடு பொருளாதரத் தடைகளும், வரிச்சலுகைகளும் இரத்தாகும் அபாயமும் இந் நாட்டுக்கு ஏற்படலாம். காணமற்போனோருக்கு என்ன நடந்தது என பதில் கூற வேண்டும். உடனே நீதி வழங்க வேண்டும்.குற்றம் இழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இவற்றை அரசு செய்யவில்லை எனில் உள் நாட்டில் சர்வதேசவிசாரணை ஒன்றை மேற் கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதிவழங்க வழிவிடவேண்டும். 

இல்லையேல் இவ்விவகாரத்தினை ஐ நா மனிதஉரிமைப் பேரவை ஐநா பாதுசபைக்கு சமர்ப்பித்து ஐநா பாதுகாப்புச் சபை ஊடக சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும் எனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.