மன்னாரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

மன்னாரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து கடந்த 03 திகதி மன்னார், உப்புகுளம் பகுதியில் வைத்து ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுடன் வட மத்திய கடற்படை கட்டளை மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்டது.

அங்கு சந்தேகதிற்கிடமான ஒருவரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவரிடமிருந்து 170 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.