கண்டி, நுவரெலியா, பதுளை வேட்பாளர்களை இறுதிசெய்தது இ.தொ.கா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

கண்டி, நுவரெலியா, பதுளை வேட்பாளர்களை இறுதிசெய்தது இ.தொ.கா!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளது.

இது குறித்து, இ.தொ.க பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசியபோது, நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்டங்களின் வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், இராஜதுரை ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் போட்டியிடவுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் பாரத் அருள்சாமி போட்டியிடவுள்ளார்.

ஏனைய இடங்களில் சுயேட்சையாக போட்டியிடுவதென்றும், சுயேட்சையாக களமிறங்கும் இடங்களும், வேட்பாளர்களும் அடுத்த ஓரிரு நாளில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.