இந்தியாவின் புது டெல்லியில் விமானிகள் இருவர், விமானத்தின் காக்பிட்(ஓட்டும் அறை) ஜன்னல் வழியாக குதித்து வெளியே தலை தெறிக்க ஓடியதை படம் பிடித்துள்ளார் ஒருவர். ஏர்-ஏசியா விமானம் புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த உடனே. அவ்விமானத்தில் சில பயணிகள் சுகயீனமுற்று இருந்தார்கள் என்றும். அவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்றும், விமான பணிப் பெண்கள் டெலிபோன் ஊடாக, விமானிகளுக்கு தெரிவத்துள்ளார்கள்.
அவ்வளவு தான் , துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று, அந்த 2 விமானிகளும் அவசரமாக தமது ஜன்னலை திறந்து. ஏறி குதித்து. இறுதியாக கீழே இறங்கும் படியில் தாவி அங்கிருந்து தலை தெறிக்க ஓடித்தப்பியுள்ளார்கள். வீடியோவைப் பாருங்கள் புரியும்.
அடேங்கப்பா என்ன கடமை உணர்வு போங்கள். விமானி கடைசி வரை தன் அறை கதவை திறக்கவே இல்லை.