உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 25, 2020

உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்!

வீட்டில் இருக்கும் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அளவைக் கண்டறிய சுய மதிப்பீட்டு சோதனை தேவையா? என கண்டறிய அப்பல்லோ மருத்துவமனைகள் சனிக்கிழமை அதன் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் இணையதளத்தினை வெளியிட்டு உள்ளது.

“அப்பல்லோவின் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் உங்கள் தற்போதைய அறிகுறிகளின் அடிப்படையில் ஆபத்து மதிப்பெண்ணை உருவாக்குவதன் மூலம் தேவையில்லா யூகங்களை குறைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களிடம் கொரோனா தொற்று உள்ளதா அல்லது சாத்தியமான கூறுகள் உள்ளதா என்பது குறித்த உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கும்” என்று அப்பல்லோ மருத்துவமனைகள் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இடர்-மதிப்பீட்டு சோதனை என்பது உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் AI வடிவமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.
இந்த ஆன்லைன் கருவியைத் திறக்கும்போது ஒருவருக்கு “வணக்கம்! எங்கள் கொரோனா வைரஸ் சுய மதிப்பீட்டு ஸ்கேன் WHO மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்பு நிபுணர் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என செய்தியை முதலில் வெளியிடுகிறது.
கொரோனா வைரஸ் ஆபத்து ஸ்கேன் கருவி ஒருவரது வயது, பாலினம், தும்மல் தொண்டை மற்றும் வறட்டு இருமல், தற்போதைய உடல் வெப்பநிலை, பயண வரலாறு, கடந்தகால நோய் மற்றும் நீரிழிவு, நுரையீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் உள்ளிட்ட எட்டு கேள்விகளைக் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கேள்விகளுக்கான பதில்களை பெறுவதன் மூலம் சோதனை நுண்ணறிவு மதிப்பெண் வழங்குகிறது. குறைந்த, உயர் முதல் நடுத்தர மதிப்பெண்கள் மூலம் ஒருவர் சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை பயனர்கள் இதில் அறிந்து கொள்ளலாம். அதிக அல்லது நடுத்தர மதிப்பெண் பெற்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அது பரிந்துரைக்கின்றது.
மேலும் பயனர்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா அல்லது பரிசோதிக்க வேண்டுமா என்று மதிப்பிடுகிறது. இது அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனையின் முடிவில் அடிக்கடி சுத்திகரிப்பு மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறது.
அப்பல்லோவின் இடர் ஸ்கேனர் என்பது தொழில்நுட்ப தீர்வு அல்ல, இது பயனர்கள் தங்களைத் தாங்களே சோதிக்க உதவுகிறது மற்றும் சோதனை தேவைப்பட்டால் தீர்மானிக்கிறது. இந்த வசதியினை பயனர்கள் https://covid.apollo247.com/ என்ற இணைய வழிதடத்தின் மூலம் அணுகலாம்.