யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவ ரை யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவினார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி த்துள்ளனர்.
அரியாலை மாம்மபழம் சந்தியை சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது36) என்ற குடும்பஸ்த்தர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கல்வியங்காடு பகுதியில் கெமி குரூப்பை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் சலூன் ஒன்றில் வைத்து விக்டர் சுந்தர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி கணவனை தேடியுள்ளார். எனினும் நீண்ட நேரத்தின் பின்பே அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்றபோது அவர் மீது பொலிஸார் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாகவும் கூறும் மனைவி இதனையடுத்து தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தகவல் வழங்கி உடனடியாக செயற்பட்ட மனித உரமை ஆணைக்குழுவின் யாழ்.இணைப்பாளர் கனகராஜ் பொலிஸாருடன் கடிமையாக போராடி கணவனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் மனைவி கூறியுள்ளார்.
இதேவேளை தாம் பொலிஸ் நிலையம் சென்றபோது விக்டர் சுந்தர் என்ற குடும்பஸ்த்தர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும் பொலிஸாரின் இந்த மனித உரமை மீறல் குறித்து தாம் அறிக்கை சமர்ப்பிப்போம் எனவும் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் கனகராஜ் கூறியுள்ளார்.