இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 11, 2020

இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்!

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பதவி காலத்தில் இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பாக தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்து இலங்கையர்களிடமும் தாம் விடைபெறுவது தொடர்பாக தம்மால் அறிவிக்க முடியாமை குறித்து கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பாக கொண்டுள்ள உண்மையான அன்பு மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் என்பது சீன சகோதர சகோதரிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்