சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி, இலங்கையில் கொரோனா அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு பேர் தான் என்று உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் மக்களிடம் இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்ள நிலையில் உணவுப் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவும் என்று பரவும் வதந்திகளால் பெற்றோல் நிரப்பு நிலையங்கள், பொருட்கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதை காண முடிகிறது.
இதனால் பொதுமக்கள் பலர் தமது அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலமை உருவாகியுள்ளதோடு தட்டுப்பாடுகளும் ஏற்படுவதை காண முடிகிறது.
மேலும் அரசாங்கம் ஏற்றுமதி,இறக்குமதி பற்றி எந்தவித பாதகமான அறிவித்தல்களையும் இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.