கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.