சுமந்திரன் இருந்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

சுமந்திரன் இருந்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது?

ஏம்.ஏ.சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலைச்செல்வி விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் தமிழ் மக்களைம் அழிக்கும் வகையிலையே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் எம்.ஏ.சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட்சியில் உள்ள அனைவரும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்பது தெரியாமல் இருக்கின்றது.

தந்தை செல்வா சொல்லியிருந்தார் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என .ஆனால் எம்.ஏ.சுமந்திரன் இருக்கும் வரை தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்தார்.

அதேவேளை 2010 ஆண்டு எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் வரும் போது இவருடைய வரவு ஒரு ஆபத்தானது என அன்றே கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட் மகளிர் அணி செயலாளர் சி.விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக எம்.ஏ.சுமந்திரன் தேர்தலில் தோல்வியடைவார் எனவும் அவ்வாறு தோல்வியடையும் போது தமிழரசு கட்சி தேசியப்பட்டியலில் சந்தரப்பத்தை கொடுக்காவிட்டாலும் பெரும்பான்மையின கட்சிகள் ஒரு இடத்தை கொடுக்கும் எனவும் சி.விமலேஸ்வரி தெரிவித்தார்.

முன்னதாக தந்தை செல்வா தூபி முன்னதாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்