மதகுக்கு வெட்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞன் மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 15, 2020

மதகுக்கு வெட்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் பணி முடித்து வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.