யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்திப்பகுதியில் பகல் வேளையில் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்ட கொடிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்தி அண்மையில் உள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 42 வயது உடையவர் எனவும் கொடிகாமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கைது செய்யப்பட்டவரிடமிருந்து 144,000 பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .