யாழில் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறப்பு : மீண்டும் அதிசயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 15, 2020

யாழில் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறப்பு : மீண்டும் அதிசயம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே ஒரு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் குழந்தைகளையும், தாயையும் நலமாக மீட்டார்.

இதேபோல் இம்மாதம் 2ம் திகதியும் யாழ்.கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.