கொரோனா வைரஸ் தொற்று பேரிடரினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்களை வழங்கும் முகமாக செட்டிபாளையம் - சிவன் ஆலய திருவருள் சமூக மேமம்பாட்டு பிரிவினரால் குறிப்பிட்ட தொகைக்கான காசோலை இன்று (30.03.2020 ) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்கு கையளிக்கப்பட்டது.
ஆலய முன்றலில் வைத்து ஆலய தலைவர் திரு.மு.பாலகிருஸ்ணன் போசகர் திரு.க.துரைராசா அமைப்பின் பேரிடர் தடுப்பு பிரிவின் இணைப்புச் செயலாளர் திரு.சி.பாஸ்கரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் செட்டிபாளையம் தெற்கு கிராம சேவை உத்தியோகத்தர் திரு.சி.லவகீதன் அவர்கள் ஊடாக ம.தெ.எ.ப பிரதேச செயலககத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது