கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 30, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு ஒன்லைன் முறையில் கவுன்சிலிங்



கொவிட்-19 வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்க நேர்ந்துள்ள பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக வீடியோ காணொளிகளை ஒளிபரப்புவதன் மூலம் சிறுவர்களும், வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்களும் வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்கிக்கிடப்பதனால் ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கத்தை குறைக்கின்றது