Halloween Costume ideas 2015

என்னை பலிக்கடா ஆக்கிவிட்டனர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தாக்குவது தவறு. அவர் செய்யக் கூடியவற்றை செய்து வருகின்றார் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழர் அரசியலுக்கு கெலிகெப்டர் இறக்குமதிகள் தேவையில்லை என்றும் அது இன்னும் பல விக்கினேஸ்வரன்களையே உருவாக்குமென்றும் தெரிவித்துள்ளார்.


விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அதனை ஆளுநரிடம் வழங்குவதற்கு தயாரித்தவர்கள் துணிச்சல் இல்லாமல் பயந்த நிலையில் என்னை பலிக்கடா ஆக்கினர். எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..


நாங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டிய மற்றும் பதில் வழங்க வேண்டிய  நிலைக்கு வந்துள்ளோம்.


முதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில்  இடம்பெற்ற கருத்து  அடிப்படையில் சில  கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்கிறேன். விமர்சனங்கள் எந்தவொரு அரசியல் கட்சியாலும் எந்தவொரு அரசியல்வாதியாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை.


வள்ளுர் சொன்னதுபோல செவி கைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கேள்தங்கும் உலகு ஆகவே விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டியவை. அவை சுய ஆய்வுக்கு உட்படுத்தப்பட  வேண்டியவைஇ அது சுய நடவடிக்கைக்கும்  உட்படுத்த வேண்டியவை அவை முன்னேற்றங்களுக்கான திட்டமிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றஅடிப்படையிலே இரண்டு மூன்று விடயங்களை நான்தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.


 அநேகமான நேற்றைய பேச்சாளர்கள் தமிழரசுக் கட்சிஅல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்குவருடங்களாக எதுவும் சாதிக்கவில்லை என்றபெரும்பாலான குற்றச்சாட்டுக்களைமுன்வைத்தார்கள். அதற்கு போதுமான விளக்கங்களைதிரு. சுமந்திரன் அவர்கள் முன்வைத்தார்கள். நாங்கள்ஒரு இன விடுதலைக்கானஇ இனத்தினுடைய தன்னாட்சிக்கான ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள்மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக  வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்றஉறுப்பினர்கள். அந்த முயற்சியின் அடிப்படையில்தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த அரசியல் திருத்தமுயற்சிகள் அதனுடைய அழுத்தங்களை நாங்கள்எங்களுடைய நாடாளுமன்ற குழு சுமந்திரன் உட்பட்டமுன்னெடுத்து வந்த காரணங்களால் அந்த இறுதிவடிவம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவிருந்தநிலையில் 2018 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிஇடம்பெற்ற சதி நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.


அவ்வாறு தடுக்கப்படாமல் போயிருந்தால் அந்தமுயற்சியினுடைய முன்னெடுப்பிலே நாங்கள் ஒருமுன்னேற்றமான நிலையை எய்தியிருப்போம். அந்தஅறிக்கையிலே பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த மிக முக்கியமாக மத்திய மற்றும் மாகாண தொடர்புகள்  சம்பந்தமான குழுவிற்கு எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தான் தலைமை தாங்கினார்கள். அந்த அறிக்கையிலேயே  அதிகாரப்பகிர்வு சம்பந்தமான பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.


அதிகமான அதிகப் பகிர்வு என்று நான் முழுமையாக சொல்லவில்லை. அந்தத் தீர்வு தான் எங்களுடைய இறுதி என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் ஒருபடி முன்னேற்றத்திற்கான வழியாக  அமைகின்றது என்று சொல்ல வருகிறேன். அந்த அதிகாரப் பகிர்வினுடைய செயற்பாடு சதியின் மூலம் தடுக்கப்பட்டது.


எங்களுடைய முயற்சி தொடர்ந்துதான் இருக்கிறது. அந்த ஆவணம் அப்படியேதான் இருக்கிறது. அது இன்னும் வேறு வடிவத்தில் முன்னேற்றகரமாக  முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.


ஆகவே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த வேளையிலேயே இனம் சார்ந்து மிகத் தெளிவான ஒரு செயற்பாட்டை நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் மிகப் பணிவோடு  தெரிவிக்க விரும்புகின்றேன்.


ஆனால் இரண்டு விடயங்கள் அங்கே  குறிப்பிடப்பட்டது. ஒன்று கம்பவாரி ஜெயராஜ் அவர்கள்சொன்னார்கள். இளைஞர்களுக்கான வாய்ப்பு வசதி அவற்றை வழங்கக்கூடிய சந்தர்ப்பம். அவர்களை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு இது பற்றி சொன்னார்கள்.


ஆனால் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். அது ஒருபடிமுறையான வழிவர வேண்டும். எடுத்த எடுப்பிலே கெலிஹாப்டர் பாச்சல்  மாதிரி இல்லாமல் ஒருகட்சியினுடைய அடிப்படையிலே இருந்து அந்தகட்சியினுடைய அல்லது அரசியலினுடைய அடிப்படைகுறிக்கோள் இயங்கு நிலைக்கு வந்து கட்சிப் பதவிகளை பொறுப்புக்களை ஏற்று அரசியல் பொறுப்புக்களை  ஏற்கக்கூடிய வழிமுறைகளிலே எங்களுடைய கட்சி ஏற்கனவே ஈடுபட்டு வந்திருக்கிறது.


இன்றைக்கு உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கக்கூடிய தவிசாளர்களிலே கிட்டத்தட்ட ஒன்பது பேர் இளைஞர்கள். அவர்கள் வளர வேண்டியவர்கள். அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் ஒத்துமொத்தமாக ஒதுங்கி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அரசியலும் சரி பொது நிர்வாகத்திலும் சரி தனி நிர்வாகத்திலும் சரி தனியார் துறையாக இருந்தாலும் சரி அவ்வாறான செயல்முறை சாத்தியமற்றது.


கோப்பிரேட்  முகாமைத்துவம் என்று சொல்லக்கூடிய மேல் நாடுகளில் இருக்கக்கூடிய முகாமைத்துவத் தத்ததுவத்தின் படி  அந்த முகாமைத்துவ பணிப்பாளர் சபைகளில் அடிப்படையில் சுழற்சி முறை  மாற்றங்கள் நிகழும்.


உதாரணமாக 30 பேர் இருந்தால் 10 பேர்போவார்கள். 10 பேர் வருவார்கள். தொடர் அனுபவங்கள் தொடர்ச்சியாக இருக்கும். அந்த வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்கும். அவ்வாறு தான் ஒரு நிறுவனம் திறமையாக செயல்பட முடியும். அதைவிட்டு முழுமையாக புதியவர்களோ அல்லது முழுமையாக தொடர்ந்து  இருப்பவர்களோ தொடர்ந்து திறம்பட செயற் படமுடியாது . மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில்  இன்றைக்கு அனுபவம் மிக்க இந்த நாட்டின் அரசாங்கத்தைச் சந்தித்தவர்கள் பேசியவர்கள் அவர்களோடு இணைந்த செயற்பாட்டைப் பார்த்தவர்கள் இன்றைக்கு அவர்களுடைய அனுபவத்தோடு அடுத்த பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.


நேற்றைய தினம் என்னுடைய நண்பன் சூரியசேகரம் அவர்களை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை பல காலமாக முகாமைத்துவ கழகத்திலே எம்மோடு செயற்பட்டவர்.  அவர் இரண்டு விடயம் சொன்னார்.


ஒன்று அவர் முன்னாலே இருந்த சுரேன் ராகவனைப் பார்த்து அவரை அடுத்த முறையோ அல்லது  இந்த முறையே எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அவரை  நாங்கள் உயர் பதவிக்கு உள்வாங்க வேண்டும் என்றார்.


அரசியல் என்பது அதற்கான அனுபவம் வேண்டும். இன்றைக்கு ஏன் சம்பந்தன் ஐயாவைப் பின்பற்றுகின்றோம். அவரிடமிருக்கின்ற ஆற்றல் அறிவு அனுபவம் ஏற்புடைமை ஆகும்


மேலும்  இன்னொருவரையும் இவர் தன்னுடையவசதிக்கு ஏற்றமாதிரி கொண்டு வர வேண்டும் என்றார். நான் பல இடங்களிலும்  நேற்றைய தினம் எனது நண்பர்களிடம் சொன்னேன்  இவ்வாறு ஹெலிக்கொப்டர் பாய்ச்சல்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு அரசியல் தெரியாது. நிர்வாகமும் தெரியாதுன்னும் பல விக்னேஸ்வரன்களை உருவாக்குவோம்.


விக்னேஸ்வரன் நல்ல மனிதர். எங்களுடைய சுமந்திரனின் ஆசிரியர் அது வேறு. அவரை நான் ஒரு ஆன்மீகவாதியாகப் பார்க்கிறேன். ஏன் அவர் தோற்றார். பல பேர் பல மாதிரி விமர்சிக்கிறார்கள்.அரசியல் அணுகுமுறை அவரிடம்  இருக்க வில்லை. அதுதான் தோல்விக்கு காரணம். நிர்வாக அனுபவமும்  அவரிடம் இருக்க வில்லை. ஒரு கட்சிக்குள் இருந்து வளர்ந்தாலே  ஒரு கட்சிக்காரனுக்கு அந்த அனுபவம் இருந்திருக்கும். அவ்வாறு இல்லாத ஒருவரை ஏதோஒரு காரணங்களுக்காக நாங்கள் கொண்டு வந்தோம். அது தவறாக முடிந்திருக்கிறது.


அதிலே ஒரு விடயம் நேற்று பேசப்பட்டது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. ஜெயராஜ்  பேசும்போது சொன்னார் சம்பந்தர் ஐயா அவரை உடனடியாக 2015 ஆம்ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலே வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள்  என்று எங்களுக்கு எதிராக பேசின பொழுதே அவரை நீக்கியிருக்கலாம். அதுதான் பொறுத்தமானது தலைமைத்துவதற்கு அழகு என்று  சொன்னார்.


அதைத் தொடர்ந்து பேசிய  சயந்தன் சொன்னார் அவருக்கு எதிராக பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள். அவரை எதிர்க்க துணிவில்லை என்றார். எனக்கு இது விளங்கவில்லை. உண்மையாக சொன்னால் சில மாகாண சபை உறுப்பினர்களே பயந்தார்கள்.


குற்றம் காணாத அமைச்சர்களுக்கு எதிரான விக்னேஸ்வரனின் தீர்மானத்தை நான் எதிர்த்தேன். அந்த சபையிலே நான் சொன்னேன். நீங்கள் உங்களுடைய தீர்ப்பை இப்பொழுது  வாசிக்க வேண்டாம் என்று.


இங்கே எமது முன்னாள் மாகாண சபை  உறுப்பினர்கள் இருக்கிறார்கள் விக்னேஸ்வரனின் இரண்டாவது முடிவோடு நான் உடன்படவில்லை என்று  பகிரங்கமாகச் சொன்னேன். நம்பிக்கை இல்லா பிரேரணையை முதலில் கட்சி தீர்மானத்ததோ  தெரியவில்லை. நான் கட்சி அலுவலகத்திற்கு போன  போது என்னுடைய பெயரை முன்னுக்குப் போடவேண்டாம். அது சரியில்லை. நாகரீகமில்லை பின்னுக்கு போடுங்கள் என்று நான் சொன்னேன்.


அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை முன்னுக்குப்போட வேண்டும் என்று போட்டார்கள். அதற்கும் நான்கையெழுத்து வைத்தேன். அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கமலேஸ்வரன் என்னிடம் தந்தார்  நான் சொன்னேன் நான் இதை கொடுக்கிறது சரியில்லை. அவர்களைக் கொடுக்கச் சொல்லுங்கள்  நானும்  வருகிறேன் என்று கூறி எனது வாகனத்தில் சுகிர்தனோடு எந்த ஆவணத்தையும் கொண்டு செல்லாமல் சென்றேன்.


பின்னர் இந்த ஆவணத்தை தயாரித்தவர்கள்  தாமே கொடுக்கத் தைரியம் இல்லாமல் துணிச்சல் இல்லாமல் என்னிடம் திணித்தார்கள்  எனவே நான் கொடுத்தேன்.


இப்பொழுது  யாருக்கு தைரியம் இல்லை துணிச்சல்  இல்லை என்பது தெளிவு  இவர்களுக்குத்தான் துணிச்சல் இல்லை. எல்லோரும் ஒளித்து விளையாடினார்கள். கொடுத்த அன்று இரவே இங்கிருந்து கொழும்பு வரை போய் 21 பேரிடமும் கையெழுத்து வாங்கியவன் நான். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் எங்களுடைய உறுப்பினர்கள் சிலருக்கு பயம்.


இதற்கு முன்பு விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு கருத்து வந்தபோது ஒரு மாகாண சபை உறுப்பினர் தான் தான் இணைப்பாளர்  என்று தன்னைக் கூறிக்கொண்டு உறுப்பினர்களோடு ஒருகூட்டம் வைத்துக் கொண்டு விக்னேஸ்வரனிடம் இப்படிபிரச்சனை இருப்பதாகவும் தான் முதலமைச்சருக்காக கதைத்ததாக கூறிய பொழுது அனந்தி சசிதரன் உம்மை இணைப்பாளராக யார் நியமித்தார் என்று கேள்வி எழுப்பியதுடன் அவர் பின்வாங்கிவிட்டார்.


நாங்கள் பகிரங்கமாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். எனக்கு நல்லாகத் தெரியும். இந்தபிரேரனை  என்னிடம் வரவேண்டும். நான் சபைக்கு சமார்ப்பிக்க வேண்டும். சபையில் நம்பிக்கை வாக்குஎடுக்க வேண்டும். இத்தனையும் இருக்கிறது என்பதுஎனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த மரபை மீறிஅதனை  கையளித்தேன் .


என்னிடம்  துணிச்சல் இருந்தது. ஆனால் தயாரித்த உறுப்பினர்களுக்கு அந்தத் துணிச்சல் இல்லை. அந்ததுணிச்சல் இருந்திருந்தால் அவர்களே  கையளித்திருப்பார்கள். என்னைப் பலிக்கடா ஆக்கியிருக்க மாட்டார்கள்.
இவ்வாறான நிகழ்வுகள் இவ்வாறான பேச்சுக்கள் இன்னும் பலவற்றை சொல்ல வேண்டி நிர்பந்திக்கும்.வீரசிங்க மண்டப கூட்டம்  முடிந்து நான் வெளியே வந்தபோது இந்த விடயம் பற்றி என்னிடம் கேட்டபொழுது நான் சொன்னேன் எந்த ஒரு இறக்குமதிக்கு இடம் கொடுக்க முடியாது. இவ்வாறு இறக்குமதி என்றால் அதன்  அர்த்தம். இங்கு இருக்கிற நாங்கள் ஒன்றும் தெரியாத பேயன்கள் மடையன்கள் அறிவாற்றல் இல்லாதவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்று நினைப்பார்கள்  அதற்குநண்பர் சுமந்திரனும் இறக்குமதிதான் என்று. சொன்னார் நான் சொன்னேன் சுமந்திரன் இறக்குமதி இல்லை.அவரது பிறப்பு சான்றிதழ் குடத்தனை தான் என்றும் சுமந்திரன் 2010 பாராளுமன்றம் வர முன்னர்10 வருடங்களாக கட்சிக்கு உழைத்தவர் கட்சிக்காக வாதாடியவர் கட்சிக்குள் ஊடாடியவர். இந்த கருத்து அவருக்குப் பொருந்தாது.


எமது கட்சிக்கும்  எங்களுக்குடைய அரசியலுக்கும் இந்த மண்ணிலே இருக்கக் கூடியவர்களுக்குத்தான் உரித்து உண்டு.  அந்த உரித்தை தவறாகப் புரிந்து கொள்ள கூடாது எங்களைப் புரிந்து கொண்டவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள் இந்த மண்ணை நேசித்து அனுபவத்தவர்கள் இந்த மண்ணிலே துன்பங்கள் துயரங்கள் இராணுவ அடக்குமுறையை அனுபவத்தவர்கள் அனுபவசாலிகள் ஆர்வமுள்ளவர்கள் அறிவுள்ளவர்கள் பலர் எமது மண்ணிலே இருக்கின்றார்கள்.


அவர்களுக்கான வாய்ப்பு  இந்த மண்ணிலே வழங்கப்பட வேண்டும். இதில் நான் தெளிவாக உள்ளேன். அவர்களுக்கு மிக பலமாக நிற்பேன்.


ஆகவே தனியாக சுமந்திரனைத் சிலர் தாக்குகின்றார்கள் அது தவறு. சுமந்திரன் செய்யகூடியவற்றை செய்திருக்கிறார். அரசியலமைப்பு வரைபை உருவாக்குவது தொடக்கம் அதை முன்னெடுப்பது  தொடக்கம். இந்த அரசியலை மிகப்பொறுப்போடு எங்களுடைய தலைவர்கள் செய்துள்ளார்கள்.


ஆகவே அது தொடர வேண்டும் என்பதும் இன்னொருஎதிர்வரும் தேர்தலில்  அவர்களுடைய தொடர் நடவடிக்கையாக அது அமைய வேண்டும் என்பதும்  எங்களுடைய மக்களின்  அரசியல் தேவை என்ற  என்னுடைய கருத்தை பணிவாக பதிவு செய்கின்றேன்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget