யாழ்ப்பாணத்தின் முதலாவது தேர்தல் சுவரொட்டியினை கூட்டமைப்பின் டெலோ கட்சி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் திடீரென மூலை முடுக்குகள் எங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச்சின்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திரன் குருசுவாமியின் புகைப்படமும் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
“ தமிழினத்தின் தீர்வுக்கான எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டே இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களில் இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே தமது பிரச்சார நடவடிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட ஆதரவாளர்கள் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏக வேட்பாளரை ஆதரித்து சுரொடிகளை ஒட்டி வருகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்தும் பழைய உறுப்பினர்களே தேர்தலில் வெற்றிபெற்றுவரும் சூழலில் படித்த, மூன்று மொழிகளும் சரலமாக பேசக்கூடிய , இளமையான , பொருளாதார சிந்தனை உள்ள , புதியவர்கள் கூட்டமைப்பில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றுள்ள நிலையில் அதனை கருத்திற்கொண்டு ரெலோ கட்சியானது தனக்கு வழங்கப்பட ஒற்றை ஆசனத்தை மேற்குறிப்பிட்ட அனைத்து தகுதிகளுமுடைய சுரேந்திரன் குருசுவாமிக்கு ஒதுக்கியுள்ளமையினால் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து சுரேந்திரனின் வெற்றிக்கு உழைத்துவருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும் சுரேந்திரனை யாழ் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிபெறச்செய்து கூட்டமைப்கிற்கு புது இரத்தம் பாச்சுவதற்கு உறுதிபூண்டுள்ளதாக கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்