லண்டனில் உள்ள கிங்ஸ் போதனா வைத்தியசாலையில், தாம் பராமரித்து வந்த 8 கொரோனா நோயாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்ததை அடுத்து. பெரும் மனவேதனை அடைந்த 20 வயது தாதி ஒருவர், தன்னை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருமே சாகிறார்கள் என்று மிகவும் மனமுடைந்து, அவர் தனது தோழிகளோடு பேசிவந்துள்ளார்.
தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில் இன்று அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.