அடுத்த இரண்டு வார காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம். இந்த இரண்டு வாரகாலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். முடிந்தளவு தனிப்பட்ட முறையில் மக்கள் தம்மை பாதுகாத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.