
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27காலை 06.00மணிக்கு நீக்கப்படவிருந்தது.
எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் முன்னர் அறிவித்ததன் பிரகாரம் அமுல்படுத்தப்படும்.