பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் – கோட்டாபய - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, March 7, 2020

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் – கோட்டாபய

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டுடன் நடந்துகொள்ளல் போன்றவற்றை தடுத்துநிறுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மகளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

வருமானம் ஈட்டல் நடவடிக்கைக்கு பெண்களும் சரிசமமாக பங்களிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுயமாக தீர்மானம் எடுக்கவும் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிக்கவும் நாட்டின் அரசியல் போக்கை யைாளவும் இலங்கை பெண்களுக்குள்ள உரிமையை மேலும் உறுதி செய்தல் வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.