நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதுதான் எமது முதற் கடமை. தமிழர்களின் உரிமைப் பிரிச்சனையெல்லாம் அதன் பின்னர்தான். ரணில் காலத்தில் நாங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியதை போல, மீண்டும் இப்பொழுது ஜனநாயகத்தை காப்பாற்ற 20 ஆசனங்களை எமக்கு தர வேண்டும். விக்னேஸ்வரனை விரட்டியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று வடமராட்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இருந்து தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் நாங்கள் சேர்ந்து செயற்பட்டு வந்தோம். அப்படியானவர்கள் உடன் சேர்ந்து இயங்கி தான் தென்னிலங்கையின் நிலவரத்தை மாற்றக் கூடியதாக இருந்தது. நாட்டினுடைய ஜனநாயகம் இல்லாமல் போனால் தமிழர்களின் உரிமையை பெறுவது கூட முடியாமல் போய்விடும்.
ஜனாதிபதி தேர்தலின் முன்னர் ஜயம்பதி விக்ரமரத்ன சந்திரிகா அம்மையாருடன் பேசிவிட்டு என்னை சந்தித்தார். அப்பொழுது சம்பந்தன் நாட்டில் இருக்கவில்லை. மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கலாமா என்பது பற்றி எமதும், ஜேவிபியினதும் அபிப்ராயத்தை அறியும்படி சந்திரிக்கா கூறியிருந்த அடிப்படையில், என்னிடம் வினவியபோது கட்சியிடன் கேட்காமலேயே அதற்கு ஆம் என நான் கூறுவேன் என கூறினேன். மைத்திரிபால சிறிசேன மிகவும் முற்போக்கு சிந்தனை உடையவர்.
மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்த போது முதலாவது மனுவினை நாங்கள் தாக்கல் செய்தோம். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்றியதில் முன்னிலையில் நின்றவர்கள் நாங்கள். ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக செய்யவில்லை .
இப்பொழுதும் அந்த ஜனநாயகத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. அதை பாதுகாப்பது நமது கடமை தமிழர்களின் உரிமைப் பிரச்சனையெல்லாம் இதற்கு பின்னர்தான்.
ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.
சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. பொலிசார் விசாரணை நடத்தும்போது, அது யாருக்கும் தெரியாது. அதுபோல இந்த சர்வதேச விசாரணையும் இரகசியமாக நடந்து முடிந்து விட்டது என்றார்.