19 சிரிய இராணுவம் பலி.. 103 டாங்கிகள், வான் பாதுகாப்பு கட்டமைப்பு அழிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 1, 2020

19 சிரிய இராணுவம் பலி.. 103 டாங்கிகள், வான் பாதுகாப்பு கட்டமைப்பு அழிப்பு!


சிரியாவின் இட்லிப்பில் பகுதியில் துருக்கி நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில்  பத்தொன்பது சிரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிரிய போர் விமானங்களயும் துருக்கி சுட்டு வீழ்த்தியது.

இந்த நடவடிக்கையின் பெயரை ஒப்ரேசன் ‘Spring Shield’ என துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்தார்.

துருக்கியின் நடவடிக்கையில் சிரியாவில் நூற்று மூன்று டாங்கிகள், எட்டு ஹெலிகொப்டர்கள், ஒரு ட்ரோன், 72 ஹோவிட்ஸர்கள், ரொக்கெட் ஏவுகணைகள் மற்றும் ஆறு வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

சிரிய அரசாங்கத்தின் முக்கிய நட்பு நாடான ரஷ்யா, சிரிய வான்வெளியில் துருக்கிய விமானங்களின் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த முடியாது என்று எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் வான்வழித் தாக்குதலில் 33 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதால் இட்லிபில் பதற்றம் கடுமையாக அதிகரித்தது.