கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் 6000 கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார்.
கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலும் தற்போது வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீதியடைந்த பொதுமக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் கோழிக்கறியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் நுல்சூர் பகுதியை சேர்ந்த வியாபாரி மகந்தர் என்பவர் தன்னுடைய 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார்.