மட்டக்களப்பில் பப்பாசி மரம் வீழ்ந்து சிறுவன் பலி!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 30, 2020

மட்டக்களப்பில் பப்பாசி மரம் வீழ்ந்து சிறுவன் பலி!!



மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரம் ஒன்றை வெட்டி வீழ்த்த முயற்சித்த போது மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டின் பகுதியில் இருந்த 30 அடி உயரம் கொண்ட பப்பாசி மரம் ஒன்றை கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த சிறுவனும் அவரின் 13 வயது சகோதரனுடன் சேர்ந்து பெற்றோருக்குத் தெரியாமல் வெட்டி வீழ்த்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன்போது 13 வயது சகோதரன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்துவதற்கு கயிற்றை இழுத்துக் கொண்டார். மரத்தை உயிரிழந்த சிறுவன் கோடரியால் வெட்டும் போது மரம் சரிந்து சிறுவனின் தலையில் வீழ்ந்ததையடுத்து படுகாயடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.