இடர்காலத்தில் தமிழ்சைவத்தின்பங்கு
அன்புசிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
சைவசமயம்அறிவு, அன்பு ஆகியவற்றையே கடவுள், தெய்வம் என்று கூறுகின்றது. தெய்வத்தமிழ் உண்மை அறிவையும் அன்பையும் அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றது. தமிழ் மொழியும் சமயமும் உற்ற துணையாக அமையும்போதுஅனைத்து உயிர்களிடமும் உயிர் இரக்கம் காட்டுதல், மனித நேயத்தை வளர்த்தல், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கூடி வாழ்தல் ஆகியவையேஉலக சமயங்களின் இணக்கப்பாடான கருவாக அமைந்துள்ளது.
உலகமக்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைகின்ற இடமாகத் திருக்கோயில்கள் வெளிநாடுகளில் விளங்குகின்றன. தாயகத்திலும் புலத்திலும் திருக்கோயில்கள் சமுதாயக்கூடங்களாக செயற்பட்டு, மக்கள் தொடர்புச் ஊடகமாக உருப்பெற்றுள்ளன.
மக்கள்இயக்கமாக செயற்பட்டு மக்கள் ஒன்று திரட்டி அவர்களை ஓர் இயக்கமாக்கி அவர்கள்மூலம் பழைய திருக்கோயில்களைப் புதுப்பித்தும் - பலபுதிய திருக்கோயில்களை உருவாக்கியும் இசைத்தமிழால் இறைவனைப் போற்றித் துதித்தும் நாயன்மார்கள் சமூகவாழ்வில் புரட்சியாளர்களாகத் திகழ்ந்தனர்.
நோய்கள்பரவியபோதும், பெரும் இடர்கள், பஞ்சம் ஏற்பட்டபோதும் தமது திருவருளாலும் இறைகருணையாலும் மக்களுடன் இணைந்திருந்து சமூக அக்கறையுடன் திருப்பணிஆற்றினர். பஞ்சம் நீக்க படிக்காசு வேண்டிப் பாடியதும், மன்னனின் நோய்போக்கி அருளியதும் பக்தி இலக்கிய வரலாறு ஆகும்.
«காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்க» இறைவனை வழிபட்டு உள்ளம் உரம் பெற்றதும், மலையளவுஇடவர் வரினும் இறைபக்தியன்; தளத்தில் பலுவால் மீண்டுவந்ததும் தமிழர் பண்பாடாகும்.
தும்மல்இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மைநரகம் விளைந்த போழ்தினும்
இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையினும்துணை அஞ்செழுத்துமே
தும்மல், இருமல், தொடர்ந்து வரும் பொழுதும், கொடிய துன்பங்கள் அனுபவிக்கும் காலத்ததிலும, முற்பிறவிகளில் செய்த வினை இந்த பிறவியில்வந்து வருத்துமுன் காலத்தும் மறுபிறவிக்கும் துணையாக வந்து உதவுவது, திரு ஐந்தெழுத்தான நமசிவாயஎன்ற மந்திரச்சொல்லாகும் நற்றமிழ் ஞானசம்பந்தர் தமிழ்மீது ஆணைகொண்டு மொழிந்த மொழி ஆகும்.
ஞானசம்பந்தர்மொழி தெளிந்து பக்தியால் நோய்த்தொற்று அகல சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில்அமைந்துள்ள எண்சமயத் தலைவர்களுடன் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞர்னலிங்கேச்சுரர் திருக்கோவில் இணைந்து இக்கடின காலத்தில் இறைவன் நல்லருள் அருள வேண்டுகின்றோம்.
பல்சமயத் தலைவர்கள் செய்தி
சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் கீழ்க்கண்டவாறு தனது செய்தியினை நவின்றுள்ளார்:
தொற்றுத்தவிர்க்க கோவிலுக்குள் அடியார்கள் நேரடி வருகை தவிர்த்து வழிபாடுகள் இடம்பெற்றாலும், மக்களது நம்பிக்கையும் வேண்டுதல்களும், இறையருளும் கோவில் முழுவதும் நிறைந்தே நல்லொளி மிளிர்கின்றது.
பல்சமயஇல்லத்தில் சுவர்கள் எம்மைப் பிரித்தாலும் எல்லாம் வல்ல இறைவனை வழிடும்போதுசுவர்கள் அற்று தோன்றப்பெருமை இறையை நாமும் ஒன்றா வேண்டுகின்றோம். கலங்காது வீடுகளில் இருந்தபடி நற்சிந்தனையின் எண்ணத்தைப் பகிருங்கள். அனைவரது வழிபாட்டின் நற்பலனும் ஒன்று திரடண்டு இடர்நீங்க இறையருளைக்கூட்டும்! இக்கடின காலமும் கடந்துபோகும்.