இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி - சென்ற இடங்கள் தொடர்பான விபரங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 11, 2020

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி - சென்ற இடங்கள் தொடர்பான விபரங்கள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கையர் தற்போது அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு 71 நாட்களின் பின்னர் இலங்கையில், உள்நாட்டு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இத்தாலி மொழி பேசக்கூடிய சுற்றுலா வழிக்காட்டியாகும். மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க என்ற அவர் கடந்த 3ஆம் திகதி இலங்கை வந்த இத்தாலி சுற்றுலா பயணிகளுக்காக பணியாற்றியுள்ளார்.

கடந்த 3ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை சீகிரியா, பொலநறுவை மற்றும் கண்டி பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் அந்த பிரதேசங்களில் உள்ள பல ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

இத்தாலி நாட்டவர்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்றுக்கொண்ட ஜயரத்ன, கடந்த 8ஆம் திகதி மத்தேகொடயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடையவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஜயந்த, சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் இத்தாலி நாட்டவர்கள் அந்தக் ஹோட்டல்களில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக சுகாதார பரிசோதனைக்கு செல்லுமாறு ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.