ஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஒரு பிரித்தானியர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 11, 2020

ஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஒரு பிரித்தானியர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு பிரித்தானிய வீரர் உட்பட 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈராக்கில் சர்வதேச படைகளுடன் அமெரிக்க இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வரும், கேம்ப் தாஜி இராணுவ தளத்தில் 15க்கும் மேற்பட்ட சிறிய ராக்கெட்டுகள் பாய்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு பிரித்தானிய வீரர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஆர்மி கர்னல் மைல்ஸ் காகின்ஸ் இத்னை உறுதிப்படுத்தியுள்ளார்.

எந்த குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியது என்பது குறித்து அதிகாரிகள் கூறவில்லை. ஆனால் கட்டைப் ஹெஸ்பொல்லா அல்லது ஈரானிய ஆதரவுடைய மற்றொரு ஷியா போராளி குழு நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஈரான் மற்றும் ஈராக்கில் நட்பு போராளிகளுடன் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சமீபத்திய மாதங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.