கொரொனா பரவல் அபாயகட்டத்தை எட்டுகிறது : தற்போதைய எண்ணிக்கை 59 - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, March 19, 2020

கொரொனா பரவல் அபாயகட்டத்தை எட்டுகிறது : தற்போதைய எண்ணிக்கை 59


1111-300x188.jpg (300×188)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகாித்து துள்ள நிலையில் இலங்கையில் கொரோனா அபாய கட்டத்தை எட்டிவிட்டதா? என கேள்விகள் எழுந்திருக்கின்றது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 போ் இன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 60 பேர்) அதிகரித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 243 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக் கப்படுகின்றனர்.அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 300 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.