நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நிர்பயாவின் தாயார் அளித்த பேட்டியில்
நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது என கூறியுள்ளார்
எமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது.
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள்.
தமிழர்களின் தாயகமான தமிழீழத்தில் இந்திய அமைதி படை என்ற பெயர் மற்றம் செய்ப்பட்ட பேரினவாத படைகள் எங்கள் தமிழ் பெண்களுக்கு பல இன்னல்களை நிகழ்த்தி கொலை செய்து கொன்றுகுவித்த அவலநிலை குறித்து இந்தியாவில் வசிக்கும் பெண்களுக்கு தெரியுமா , இந்தியா இராணுவம் தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை குறித்து தெரியுமா ?
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி தியாகம் பற்றி தான் உங்களுக்கு தெரியுமா
காந்தி தேசத்துக்குக் காந்தீயம் புரியும் என நினைத்தது திலீபன் மட்டுமல்ல. ஈழத் தமிழினமே நம்பிக்கையோடு திலீபனின் தவம் பலித்துத் தமிழீழ வரம் கிடைக்கும் என இலவு காத்த களியாகக் காத்திருந்தது. வந்து பார்த்துப் போன இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றும் இந்தியத் தூதுவராக நடக்காது ஜே.ஆரின் சிங்களத் தூதுவராகவே நடந்து கொண்டு மீண்டும் மீண்டும் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தமிழர்களை தவிக்கவிட்டது தான் உங்களுக்கு தெரியுமா .?
தியாக தீபம் திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். “போர் நிறுத்த நேரத்தில், இந்திய அரசின் துரோகத்தால்17 போராளிகளும் சயினைட் உட்கொண்டு வீரச்சாவைஅணைத்துக்கொண்டார்கள் இந்த இந்திய அரசின் துரோகம் தான் இந்திய மக்களுக்கு தெரியுமா
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் குறித்து தெரியுமா
2009 ம் ஆண்டு தமிழர்களை ஒரு சிறு நிலப்பரப்பில் வைத்து சிங்கள ஆரிய பெளத்த பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு இந்திய ஆரிய அரசு உதவிசெய்தும் தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிய இந்திய -சிங்கள – சர்வேதேச அரசுகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் ?
தமிழர்களுக்கு என்று நீதி கிடைக்கும்?