கொரானாவால் இலங்கையில் 4000 கைதிகள் விடுதலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 28, 2020

கொரானாவால் இலங்கையில் 4000 கைதிகள் விடுதலை!


சிறுகுற்றங்களைப் புரிந்தவர்களையும் பிணை செலுத்த முடியாமல் சிறையிலிருக்கும் சுமார் 4000 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறுகுற்றங்களை செய்தவர்களையும் , பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.

அக்குழுவினர் பலமுறை ஆராய்ந்து சிறையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிபாரிசு செய்யவுள்ளனர்.

இதனடிப்படையில் சுமார் 4000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களில் 2000 பேர் ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனையை அனுபவிக்கும் சிறுகுற்றங்களைப் புரிந்தவர்கள். ஏனைய 2000 பேர் பிணை நிபந்தனையைப் பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பவர்கள்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் , சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியினாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கைதிகளை விடுதலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சிறைச்சாலை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.