இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டனர் - எண்ணிக்கை 109 ஆனது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 28, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டனர் - எண்ணிக்கை 109 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளதுடன் 131,826 பேர் குணமடைந்துள்ளதுடன், 27,862 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.