தற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
குறித்த மத்திய நிலையங்களில் 27 வௌிநாட்டுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் புது டில்லியில் இருந்து இலங்கை வந்த யாத்ரீகர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தம்பதிவ யாத்திரைக்கு சென்று இந்தியாவில் தங்கியிருக்கும் ஏனையோரையும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்றில் அவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.