கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 1, 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

சீனா- வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, உலகெங்கிலும் மக்கள் தொற்றுநோயின் பல அம்சங்களைப் பற்றி கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள் நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிகக் கொடியதா?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையைப் பொறுத்து, அதன் தாக்கம் இருக்கும் என கூறுகின்றனர் நிபுணர்கள்.

வயதான நபர்கள், பல காலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், சுவாச பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வேகமாக பாதிப்பு ஏற்படும் என்பது மட்டுமின்றி, இதன் தாக்கவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா வியாதியை குணப்படுத்த முடியுமா?

கொரோனா வைரஸைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட எந்த மருந்தும் தற்போது இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சையையும் நிவாரணத்தையும் உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

செல்லப் பிராணிகள் முகாந்திரம் கொரோனா வைரஸ் பரவுமா?

நாய்கள் அல்லது பூனைகள் போன்ற வீட்டு செல்லப்பிராணிகளின் மூலமாக இந்த நோய் பரவக்கூடும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,

இந்த விலங்குகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.

சாப்பிடும் உணவால் கொரோனா வைரஸ் பாதொப்பு வருமா?

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் 2012 இல் MERS போன்ற ஒத்த வைரஸ் பாதிப்புகள், சாப்பிடும் உணவு மூலம் பரவியதாக தகவல் இல்லை.

அதேபோல் உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவும் சம்பவங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.இருப்பினும், முழுமையாக சமைக்கப்படாத மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸின் அறிகுறிகள் மற்ற சுவாச நோய்களைப் போலவே இருக்கின்றன, மேலும் மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் ஆகியவை அடங்கும்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையா?

பொதுவாக வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்கள் 12 ½ நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது வாடிக்கையான ஒன்று.ஆனால் பல நாடுகள் நோய் பரவாமல் தடுக்க கொரோனா பாதிப்பு பகுதிகளில் இருந்து பயணிப்பவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தும் காலத்தை ஏற்படுத்தியுள்ளன.