கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியிலிருந்து மக்களை கலைக்கும் இராணுவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 10, 2020

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியிலிருந்து மக்களை கலைக்கும் இராணுவம்!



கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணிக்கு பின்புறமாக உள்ள காணியில் வசித்து வரும் மக்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் விரட்டுவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

மக்களுடன் இராணுவம் முரண்படுவதாக கேள்வியுற்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்த போதே மக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த காணியில் நாங்கள் 1996 ஆம் ஆண்டு காடு வெட்டிக் குடியேறி வாழ்ந்து வந்தசமயம் மாவீரர் துயிலுமில்ல பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் வேறு இடங்களில் தற்காலிகமாக வசித்து வந்தோம் யுத்தத்தின் பின்னர் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது நாம் மீண்டும் எமது காணிகளை சுத்தம் செய்து மீள்குடியேறினொம்.

எமது நிலமைகளை நேரில் வந்து பார்வையிட்ட பிரதேச செயலர் அடங்கிய குழுவினர் எமக்கு 2015 ஆம் ஆண்டு காணிப் பத்திரமும் வழங்கி வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டு நாங்கள் இப்போது சற்று இயல்பு வாழ்கைக்கு திரும்பி உள்ள நிலையில்,

மாவீரர் துயிலுமில்ல காணியில் உள்ள இராணுவத்தினர் வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களுடன் வந்து எமது காணி தமது ஆளுகைக்குள் வருவதாகவும் எம்மை இக் காணியை விட்டு செல்லுமாறும் மிரட்டுவதாக தெரிவித்தனர்

குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

இம்மக்கள் தெரிவிப்பது உண்மை என்றும் இப் பிரதேசத்தில் வாழ்கின்றவன் என்பதால் இக் காணி அவர்களது என்பதும் அவர்கள் பட்ட இன்னல்கள் எனக்கு தெரியும் என தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயத்தை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக இம் மக்களுக்கான தீர்வினை பெற்றமுயற்சிப்பதாகவும் தெரிவித்ததுடன் இது இராணுவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் இம் மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்களது காணியில் அவர்கள் வசிப்பதற்கும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகவாயிலாக வேண்டுகோள் ஒன்றியும் விடுத்தார்

மேலும் இப்பகுதியில் பன்னிரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.