புதிய கூட்டணியின் சின்னத்தால் மீண்டும் ஐ.தே.க.விற்குள் மோதல்: இடைநடுவில் விலகிய சஜித் தரப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 10, 2020

புதிய கூட்டணியின் சின்னத்தால் மீண்டும் ஐ.தே.க.விற்குள் மோதல்: இடைநடுவில் விலகிய சஜித் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை 4 மணியளவில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கூட்டணியின் சின்னம் குறித்த கருத்து வேறுபாடுகளை அடுத்து செயற்குழு கூட்டத்தில் இருந்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் இடைநடுவில் இருந்து விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்துமாறு பலர் கோரிக்கை விடுத்ததை அடுத்தே சஜித் பிரேமதாச கூட்டத்தில் இருந்து வெளியேறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.