யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் கோரவிபத்து ஒருவர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 10, 2020

யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் கோரவிபத்து ஒருவர் பலி!

யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலுமொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.