வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான
பிரபல புடைவைக் கடையில் வாடிக்கையாளர் மீது தாக்குதல் முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை வெளிநாட்டிலிருந்து வருகை தந்த உறவினர்களுடன் இளைஞர்
ஒருவர் ஆடைகள் வாங்குவதற்கு குறித்த புடைவைக் கடைக்கு சென்றுள்ளனர்.
ஆடைகளை கொள்வனவு செய்யும் போது விலையை குறைக்குமாறு கோரிய போது குறத்த கடையில் வேலை செய்யும் ஊழியர் சற்று அதட்டலாக கதைத்துள்ளார்.
இதன் போது நாம் பணம் கொடுத்தே பொருட்களை வாங்க வந்துள்ளோம் எனவே மரியாதையாக கதைக்குமாறு கோரியுள்ளார்.
அந்நிலையில் குறித்த ஊழியர் அவ் இளைஞனை தாக்க வந்ததுடன் தள்ளியுள்ளார்,
அத்துடன் இளைஞனுடன் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் சங்கிலியை
அறுக்கவும், தாக்கவும் முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அச்சத்துடன் வெளியேறிய போது இதனை
அவதானித்த தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களை மறித்து அச்சத்தை
போக்கியதுடன் ஏனைய இளைஞர்களுக்கு தகவல் வழங்கினர்.
இந்நிலையில் சற்று நேரத்தில் இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி
தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தாக்கிய ஊழியரை தாக்குவதற்காக கடைக்குள்
புகுந்தனர். இதனால் சிறிது நேரம் குழப்பமாக அல்லோகலப்பட்டது.
இவ்வாறு நடைபெற்ற நிலையில் கடைக்குள் புகுந்த பொலிசார் குறித்த கடையின் ஊழியர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் இளைஞர்கள் கொதித் தெழுந்தமையாலும், ஊடகவியலாளர்களின்
வருகையாலும் செய்வதறியாது திகைத்து சமரசப்படுத்தும் முயற்சியில்
ஈடுபட்டனர். இதுவா பொலிசாரின் கடமை?
இறுதியாக குறித்த ஊழியர் மற்றும் உரிமையாளர் மன்னிப்புக் கோரியதால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.