மட்டக்களப்பில் பாடசாலை மதிலேறி களவாக வெளியே ஒடிய மாணவர்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 19, 2020

மட்டக்களப்பில் பாடசாலை மதிலேறி களவாக வெளியே ஒடிய மாணவர்கள்

தென் தமிழீழம் , மட்டக்களப்பு வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிவுறும் நேரத்துக்கு முன்னர் மதிலால் ஏறிக்குதித்து செல்வதாக விசனம்
வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் மதிலேறிக்குதிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பெற்றோர்கள்
பாடசாலையின் மேல் வைத்த நம்பிக்கையின் காரணமாகவே கல்வி கற்க
அனுப்புகின்றனர். இவ்வாறான நிலையில் பாடசாலை நேரத்தில் வெளியேறிச்செல்லும்
மாணவர்கள் எங்கு செல்கின்றனர் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களை இவ்வாறான நடவடிக்கைகளை கவனிக்காது என்ன செய்கிறார்கள் எனவும் சமூக ஆர்வர்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.மேலும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? எனவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்