வெளிநாட்டில் இருந்து வந்தர்களின் வீட்டில் பகல் கொள்ளை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 19, 2020

வெளிநாட்டில் இருந்து வந்தர்களின் வீட்டில் பகல் கொள்ளை

வெளிநாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களின் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரவெட்டி சாமியன் அரசடிப்பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

வீட்டிலுள்ள அனைவரும் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.