பதுளை பெண்ணை ஏன் கொன்றேன்?: கொலையாளியின் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 8, 2020

பதுளை பெண்ணை ஏன் கொன்றேன்?: கொலையாளியின் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்!

புதுளையில் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய விவகாரத்தில் சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையை ஏன் செய்தேன் என்ற பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
கயிலகொட பகுதியை சேர்ந்த அங்கப்பன் கௌரிதேவி (48) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய், கடந்த மாதம் 28ம் திகதி அவரது வீட்டின் மாடியில் வைத்து குத்திக் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொலையாளி முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி தப்பியோடுவதையும் அயலவர்கள் கண்டிருந்தனர்.
இந்த கொலையை தொடர்பான புலன்விசாரணையை நடத்த ஏழு பொலிஜ் அணிகளும், மூன்று புலனாய்வு குழுக்களும் களமிறக்கப்பட்டிருந்தன.
கொலை நடந்ததும், அந்த இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாய் “டஸ்டி” வரவழைக்கப்பட்டது. கொலையாளி தொடர்பான முதல் தகவலை டஸ்டி கொடுத்தது.

கொலையாளி தப்பிச் சென்ற பாதையை அது பின்தொடர்ந்து, அந்த வீட்டிற்கு அருகிலிருந்த மயானத்திற்கு டஸ்டி சென்றது. அங்கு சிறிய பொலித்தீன் பை ஒன்றை அடையாளம் காட்டியது.
வீட்டிலிருந்த சிசிரிவி கமராவில், கொலையாளி கைக்குட்டையொன்றினால் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
மயானத்தில் மீட்கப்பட்ட பொலித்தீன்  பையில், கொலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரத்தக் கறைபடிந்த கத்தி, ஒரு ஜோடி கத்தரிக்கோல், சாராயப் போத்தல், பெட்ரோல் போத்தல் மற்றும் ஒரு ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டன. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் பையில் இரண்டு சீன ரோல்ஸ் மற்றும் இரண்டு வாழைப்பழங்களையும் கண்டுபிடித்தனர்.
பொருட்களின் பார்கோடுகளைப் பயன்படுத்தி, சந்தேக நபர் கத்தி மற்றும் கத்தரிக்கோல் வாங்கிய கடையையும், அவர் சாராயம் வாங்கிய கடைகளையும் பொலிஸால் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த கடைகளில் இருந்து சந்தேக நபரின் சி.சி.டி.வி காட்சிகளை பெற்று, சில தொழில்நுட்ப பணிகளின் மூலம் சற்றே தெளிவான படத்தை பொலிஸார் பெற்றனர். இதன்மூலம் சந்தேகநபரின் தோற்றத்தை ஒத்த ஒருவரின் பேஸ்புக் கணக்கையும் அடையாளம் காண உதவியது.

இதன்மூலம், மொராகலை மாவட்டத்தில் உள்ள வரவேற்பு மண்டபமொன்றில் பணியாற்றி ஒருவரை பொலிசார் குறிவைத்தனர். 

சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் சந்தேகத்திற்கு இடமாகநடந்து கொண்டதாகவும், கொலை செய்திகளை டிவியில் பார்த்ததாகவும் சக தொழிலாளர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர். மற்றும் சில ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், சந்தேக நபர் கொல்லப்பட்டவரின் உறவினர் மற்றும் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. சமபவ தினத்தில், கொல்லப்பட்ட பெண்ணிடம் சென்று கடனை அடைக்க வேண்டும் என்று பணம் கேட்டதாகவும், அவர் மறுத்தால் அவரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு பணம் கொடுக்க மறுத்தபோது சந்தேக நபர் குத்தியுள்ளார். ஆனால் கீழே வசித்த இரண்டு பெண்களால் அங்கு வந்ததால், அவர் கொள்ளையடிக்காமல் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவரின் உடலை எரிக்கும் நோக்கில் தான் பெட்ரோல் வாங்கியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

லோகநந்தன் வித்யானன் (31) என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் பெப்ரவரி 12 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.