கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்ய முற்பட்ட போது திடீரென விஷம் அருந்தியுள்ளார். இந்த சம்பவம் அநுராதபுரம் – திரப்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் – திரப்பனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரான குறித்த பெண் தனது கணவனுடன் இணைந்து கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான விற்பணையில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
எனினும் சந்தேக நபர் தொடர்ந்தும் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் முற்பகல் குறித்த சந்தேக நபரின் வீடு சுற்றிவளைக்கப்பட்ட போது கஞ்சா பொதி செய்ய பயன்படுத்தும் கடதாசிகள் வீட்டினுள் இருந்ததுடன், பூச்சாடியொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 2கிராம் கஞ்சா பக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்ய முற்பட்ட போது பொலிசாரை அவதூறாக பேசிய பின்னர் சந்தேக நபர் திடீரென விஷம் அருந்தியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் சந்தேக நபரை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
சந்தேக நபரை பரிசோதித்த வைத்தியர்கள் பெண்ணின் உடலில் விசம் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று இரவு குறித்த பெண்ணின் உடல் நிலை தேறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பில் திரப்பனை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

