நாளை உருவாகிறது புதிய கூட்டணி: அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட முடியாதென்கிறார் விக்கி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 8, 2020

நாளை உருவாகிறது புதிய கூட்டணி: அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட முடியாதென்கிறார் விக்கி!


விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு ரில்கோ ஹோட்டலில் உடன்படிக்கை கைச்சாத்தாகும். அதன் பின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள்.

இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் இந்த விடயங்களை அறிவித்தார்.

அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது,

புதியதோர் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கில் பல கட்சிகளை இணைத்து உடன்பாட்டை தயாரித்திருக்கின்றோம். அதில் சில கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் எட்டப்படாத நிலைமையும் இருக்கின்றது. ஆயினும் தற்போது நான்குகட்சிகளிடத்தே உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றன.

இந்தக் கூட்டணியின் அரசியல் குழுவில் கட்சிகள் பலவும் சமஉரிமை கேட்கின்றனர். அவ்வாறு எல்லாருக்கும் சமஉரிமை என்றால் அதுசிக்கல் தான். அவ்வாறு பிரச்சனைகள் வருவது சகஐம் தான். ஆயினும் அவற்றைச் சீர் செய்து கொண்டே அடுத்த கட்டமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.

குறிப்பாக அனந்தி சசிதரன் மற்றும் ஐங்கரநேசன் போன்றவர்கள் அரசியல் உயர் குழுவில் சமஉரிமை கேட்கின்றனர். அதனாலே சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அனந்தி சசிதரன் அவற்றைத் தீர்த்துக் கொண்டு கூட்டணியில் இணைந்து செயற்பட இருக்கின்றார். ஆனால் ஐங்கரநேசன் இந்தச் கூட்டணியில் இணையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளவில்லை.

ஆகையினால் தற்போது நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்றபெயரில் புதியதோர் கூட்டடை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாளை செய்ய இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து கூட்டணியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என்றார்.