ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – அஜித் ரோஹன! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 19, 2020

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – அஜித் ரோஹன!

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.